விளையாட்டு

ஹைதராபாத் பந்துவீச்சில் நிலைகுலைந்தது ராஜஸ்தான்: 32 ரன்களில் தோல்வி

செய்திப்பிரிவு

முன்னதாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் அணிக்கு, துவக்க வீரர் ஷிகர் தவாணின் அதிரடி ஆட்டம் சவாலாக அமைந்தது. 20 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 33 ரன்களை வேகமாக அவர் குவித்தார். ஆனால், வாட்சன் வீசிய 4-வது ஓவரின் கடைசி பந்தில் தவாண் வீழ்ந்தார்.

தொடர்ந்து வந்த ஹைதராபாத் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற அணியின் ஸ்கோர் தத்தளித்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 134 ரன்களை மட்டுமே சேர்த்தது.

வாட்சன் ஹாட்ரிக்

4-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் எடுத்த வாடசன், அடுத்து 17-வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஹென்ரிக்கஸ் மற்றும் சர்மா ஆகியோரை அவர் வெளியேற்றினார். இதன் மூலம் இந்தத் தொடரின் இரண்டாவது ஹாட்ரிக்கை வாட்சன் பதிவு செய்தார். ராஜஸ்தானின் முந்தைய போட்டியில் அந்த அணியின் வீரர் டாம்பே ஹாட்ரிக் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT