ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
அவர் 7-6 (1), 6-7 (5), 6-7 (12) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான நிக் கிர்ஜியோஸிடம் வீழ்ந்தார்.
இந்த ஆட்டத்தில் 22 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்ட கிர்ஜியோஸ், அடுத்ததாக அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்திக்கிறார்.
வெற்றி குறித்துப் பேசிய கிர்ஜியோஸ், “சமீபகாலமாக களிமண் ஆடுகளங்களில் சிறப்பாக ஆடி வருகிறேன்.
இங்கு எனக்கு நல்ல வாய்ப்புள்ளது. என்னால் சிறப்பாக ஆட முடியும் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.