விளையாட்டு

சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான சியட் விருது: அஜிங்கிய ரஹானே வென்றார்

செய்திப்பிரிவு

2014-15-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான சியட் விருது வழங்கும் விழா மும்பையில் திங்களன்று நடைபெற்றது. சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக இலங்கையின் குமார் சங்கக்காரா தேர்ந்தெடுக்கப்பட, சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான விருதை அஜிங்கியா ரஹானே வென்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது கபில் தேவுக்கு வழங்கப்பட்டது.

ரஞ்சி சாம்பியனான கர்நாடக அணியின் கேப்டன்/பவுலர் வினய் குமார் ஆண்டின் சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார்.

264 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் விளாசி உலக சாதனை புரிந்த ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது.

அஜிங்கிய ரஹானேவுக்கு சுனில் கவாஸ்கர் விருதை வழங்க, வினய் குமாருக்கு முன்னாள் இந்திய வீரர் நாரி கண்ட்ராக்டர் வழங்கினார்.

விருது விவரம் வருமாறு:

ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்: குமார் சங்கக்காரா

சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர்: வினய் குமார்

சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் : அஜிங்கிய ரஹானே

சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்: டிவைன் பிராவோ

சர்வதேச சிறந்த பேட்ஸ்மென்: ஹஷிம் ஆம்லா

சர்வதேச சிறந்த பவுலர்: ரங்கன்னா ஹெராத்

சிறப்பு விருது: ரோஹித் சர்மா

சிறந்த இளம் வீரர்: தீபக் ஹூடா

பாப்புலர் சாய்ஸ் விருது: கெய்ரன் போலார்ட்.

SCROLL FOR NEXT