விளையாட்டு

மும்பை அணியை வீழ்த்த ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாட வேண்டும்: மைக் ஹஸ்ஸி

ஐஏஎன்எஸ்

ஞாயிறன்று நடைபெறும் ஐபிஎல்-8 இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 8 தொடர்களில் 6-வது முறையாக இறுதிக்குத் தகுதி பெற்று ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்குகிறது. இது ஒரு விதத்தில் தோனியின் ஈடு இணையற்ற சாதனைதான். ஒவ்வொரு தொடரிலும் வெவ்வேறு விதமான நெருக்கடிகளை தனது பொறுமையினாலும் நிதானத்தினாலும் முறியடித்து வந்துள்ளார் கேப்டன் தோனி.

இந்நிலையில் மைக் ஹஸ்ஸி கூறியதாவது:

மும்பை இண்டியன்ஸ் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே அவர்களை வீழ்த்த நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.

போட்டியை சிறப்பாகத் தொடங்க வேண்டும் அந்நிலையிலிருந்து எங்கள் தன்னம்பிக்கை வளர்ச்சி பெறும்.

2013-ம் ஆண்டு தொடர் போலவே இப்போதும் நிகழ்ந்துள்ளது. 2013-இல் பிளே ஆஃபில் மும்பையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றோம். பிறகு இறுதியில் அவர்கள் எங்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

இந்த முறை மாறாக பிளே ஆஃபில் எங்களை வீழ்த்தி அவர்கள் இறுதிக்கு நேரடியாகத் தகுதி பெற்றனர். எனவே இறுதியில் அவர்களை நாங்கள் வீழ்த்துவோம் என்று நம்புகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT