விளையாட்டு

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் - பெடரர்

ஏஎஃப்பி

இத்தாலியில் நடைபெற்று வரும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட் டியில் இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர் லாந்தின் ரோஜர் பெடரர் செர்பியா வின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோத இருக்கின்றனர்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சக நாட்டு வீரரான வாவ்ரிங்காவை பெடரர் எதிர்கொண்டார். இதில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார்.

ஜோகோவிச் தனது அரையிறு தியில் ஸ்பெயினின் டேவிட் பெரரை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சக நாட்டு வீராங்கனை காவ்ரிலோவாவை எதிர்கொண்டார். இதில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஷரபோவா வெற்றி பெற்றார்.

சானியா ஜோடி தோல்வி

மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி தோல்வி யடைந்தது. ஹங்கேரியின் பாபோஸ் டைமியா, பிரான்ஸின் கிறிஸ்டினா ஜோடி 6-4, 6-3 என்ற செட்களில் சானியா ஜோடியை வீழ்த்தியது.

SCROLL FOR NEXT