பிஎம்டபிள்யூ ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் இந்தியா வின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி தோல்வி கண்டது.
ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் பயஸ் ஜோடி 2-6, 1-6 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் பெயா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அலெக்சாண்டர்-சோயர்ஸ் ஜோடி 3 ‘பிரேக் பாயிண்ட்’களை மீட்ட தோடு, முதல் செட்டை 25 நிமிடங்களிலும், அடுத்த செட்டை 45 நிமிடங்களிலும் முடிவுக்கு கொண்டு வந்தது.
காலிறுதியில் யூகி
தைபே நகரில் நடைபெற்று வரும் தைபே சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பாம்ப்ரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த தைபே வீரர் ஜிம்மி வாங்கை தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி-சாகேத் மைனேனி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்தின் சஞ்சய் ரதிவதனா-சன்சாட் ரதிவதனா ஜோடியைத் தோற்கடித்தது.