இந்திய குத்துச்சண்டை வீரர் அகில் குமார், மன்தீப் ஜங்ரா என்ற வீரரை தேசிய அணியில் சேர்ப்பதற்காக கடந்த ஆண்டு தேர்வுக்குழுவை நிர்பந்தித்ததாக, மற்றொரு குத்துச்சண்டை வீரரான தில்பாக் சிங், செய்தியாளர்கள் சந்திப்பின்போது குற்றம்சாட்டி யிருந்தார்.
அதைத்தொடர்ந்து தில்பாக் சிங்கின் மீது அகில் குமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சண்டீகர் மாவட்ட நீதிமன்றம், தில்பாக் சிங் ஏற்பாடு செய்தி ருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பத்திரிகை யாளர்கள் அனைவரையும் சாட்சி களாக ஆஜராகுமாறு உத்தர விட்டது.
அதைத் தொடர்ந்து சிலர் நீதிமன்றத்தில் ஆஜரான போதிலும், மேலும் சிலர் ஆஜராக வில்லை.
இதனால் கோபமடைந்த நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.