விளையாட்டு

ஏடிபி சேலஞ்சர் அரையிறுதியில் யூகி, சாகேத்

பிடிஐ

உஸ்பெகிஸ்தானின் சமார்க்கண்ட் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சகநாட்டவரான சாகேத் மைனேனியுடன் மோதவுள்ளார்.

நேற்று நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் அட்ரியான் மெனென்டஸை தோற்கடித்தார்.

வெற்றி குறித்துப் பேசிய யூகி பாம்ப்ரி, “இது உயர்தரமான ஆட்டமாகும். ஆட்டம் முழுவதும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக் கினேன். சர்வீஸிலும் அட்ரியானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினேன். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடினேன். அதற்கு பலனாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. இரு செட்களிலும் ஆரம்பத்திலேயே அட்ரியானின் சர்வீஸை முறியடித்தது உதவியாக இருந்தது” என்றார்.

சாஹேத் மைனேனி தனது காலிறுதியில் 6-4, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த பிரிட்டனின் பிரைடன் கிளெய்னை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 58 நிமிடங்கள் நடைபெற்றது.

SCROLL FOR NEXT