ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முதல் சுற்று ஆட்டத்தில் செக். குடியரசின் கிளாரா கோவ்க லோவாவை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஷரபோவா வென்றார். கடந்த ஆண்டு மாட்ரிட் ஓபனில் ஷரபோவா இறுதி ஆட்டம் வரை முன்னேறினார் என்பது நினைவுகூரத்தக்கது. அடுத்த ஆட்டத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹாலை ஷர போவா எதிர்கொள்ள இருக்கிறார். கடந்த வாரம் ஸ்ட்டர்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பட்டம் வென்றார். செக். குடியரசின் பெட்ரா விட்டோவா, செர்பியாவின் அனா இவானோவிச் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.