விளையாட்டு

நடால்-ஜோகோவிச் சந்திக்க வாய்ப்பு

பிடிஐ, ஏஎஃப்பி

பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் பாரிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை தொடங்குகிறது.

அதை முன்னிட்டு யாருடன் யார் விளையாடுவது என்பதைத் தீர்மானிப்பதற்கான டிரா பாரிஸில் நேற்று நடைபெற்றது. அதன்படி உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளவரும், பிரெஞ்சு ஓபனில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் காலிறுதியில் சந்திக்க வாய்ப்புள்ளது.

களிமண் ஆடுகளமான ரோலன்ட் கேரஸில் (பிரெஞ்சு ஓபன் நடை பெறும் இடம்) முடிசூடா மன்னனாக திகழும் நடால் தற்போது பார்மில் இல்லாததால் தரவரிசையில் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பிரெஞ்சு ஓபன் போட்டித் தரவரிசையில் 6-வது இடமே கிடைத்துள்ளது. டிரா தொடர்பாக பேசிய நடால், “இது ஆச்சர்யமளிக்கிறது. இதற்கு முன்னர் இதுபோன்று நடந்தது இல்லை. ஆனாலும் காலிறுதிக்கு முன்னேறுவதற்கு முன்னதாக 4 சுற்றுகளில் விளையாட வேண்டியுள்ளது.

முதல் சுற்றில் விளையாட நான் தயாராக இருக்கிறேன்” என்றார். பிரெஞ்சு ஓபனில் கடந்த 10 ஆண்டுகளில் 9 முறை பட்டம் வென்றுள்ள நடால், 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். ஆனால் இந்த முறை நடால் தடுமாறி வருகிறார். ஜோகோ விச்சோ முழு பார்மில் இருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபன், இண்டியன் வெல்ஸ், மியாமி, மான்டி கார்லோ, ரோம் மாஸ்டர்ஸ் போட்டிகளில் பட்டம் வென்றதோடு, தொடர்ச்சி யாக 22 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள அவர், பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக பட்டம் வெல்வதில் தீவிரமாக உள்ளார்.

இந்தப் போட்டியில் சாம்பிய னாகும் பட்சத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற 8-வது வீரர் என்ற பெருமையைப் பெறுவார் ஜோகோவிச். அவர் தனது முதல் சுற்றில் ஃபின்லாந்தின் ஜார்க்கோ நிமினெனை சந்திக்கிறார். நடால் தனது முதல் சுற்றில் வைல்ட்கார்ட் வீரரான பிரான்ஸின் குயின்டின் ஹேலிஸை சந்திக்கிறார். மற்றொரு காலிறுதியில் 2009 பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், சகநாட்டவரான வாவ்ரிங்காவை சந்திக்க வாய்ப்புள்ளது.

மற்ற காலிறுதிகளில் போட்டித் தரவரி சையில் 3-வது இடத்தில் இருக்கும் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் டேவிட் ஃபெரரையும், செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், ஜப்பானின் நிஷிகோரியையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

மகளிர் பிரிவு

மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது 3-வது சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவையும், காலிறுதியில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் மரியா ஷரபோவா தனது காலிறுதி யில் ஸ்பெயினின் கார்லாவை சந்திக் கலாம். போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ருமேனி யாவின் சைமோனா ஹேலப் தனது காலிறுதியில் 2008 சாம்பியனான செர்பியாவின் அனா இவானோ விச்சை சந்திக்க வாய்ப்புள்ளது.

ரயோனிச் விலகல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து உலகின் 6-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச் விலகியுள்ளார். கால் பாதத்தில் ஏற்பட்ட காயத் துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், முழுவதுமாகக் குணமடையாததால் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகியிருக் கிறார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: துரதிர்ஷ்டவசமாக இந்த பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவது வருத்த மளிக்கிறது. அறுசை சிகிச்சைக்குப் பிறகு காயத்திலிருந்து விரைவாக மீள்வதற்கு முயற்சித்தேன். ஆனாலும் முடியவில்லை. அடுத்து நடைபெறவுள்ள விம்பிள்டன் போட்டிக்கு வலுவான வீரராக திரும்புவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். அனைவ ருடைய அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்கள் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் தகுதிச்சுற்றில் யூகி பாம்ப்ரி உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் தோல்வி கண்டனர். பிரெஞ்சு ஓபன் பிரதான சுற்றில் இந்த முறை இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

யூகி பாம்ப்ரி 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டிம் புயட்ஸிடமும், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 2-6, 0-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜேர்ட் டொனால்ட்சனிடமும் தோல்வி கண்டனர். இந்தியாவின் முன்னணி வீரரான சோம்தேவ் 2-6, 4-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் ஈவ்ஜெனி டான்ஸ் காயிடம் வீழ்ந்தார்.

SCROLL FOR NEXT