விளையாட்டு

நியூஸி. ஓபன்: பவார் தோல்வி

பிடிஐ

நியூஸிலாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆனந்த் பவார், ரச்சிதா சஹாதேவ் ஆகியோர் தோல்வி கண்டனர். இதன்மூலம் நியூஸி லாந்து ஓபனில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் பவார் 14-21, 7-21 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் லீ ஹியூனிடம் தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரச்சிதா சஹாதேவ்-நியூஸிலாந்தின் அபினவ் மனோட்டா ஜோடி 7-21, 10-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜெங் ஸி வெய்-சென் கிங்சென் ஜோடியிடம் தோல்வி கண்டது.

SCROLL FOR NEXT