ஜான் நினைவு ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன், சர்.எம்சிடிஎம் மேல்நிலைப் பள்ளி சார்பில் 3-வது இலவச கோடைகால பயிற்சி முகாம் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சர்.எம்சிடிஎம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற வுள்ள இந்த முகாமில் வாலிபால், கூடைப்பந்து, பால் பாட்மிண்டன் ஆகிய போட்டிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் காலை, மாலை என இரு வேளைகளிலும் பயிற்சியளிக்கப்படவுள்ளது.
முகாமில் பங்கேற்பவர்களுக்கு சுமார் 10 பயிற்சியாளர்கள் பயிற்சி யளிக்கவுள்ளனர். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர் களுக்கு விளையாட்டு உபகரணங் களோடு தினந்தோறும் முட்டை, பால் ஆகியவை வழங்கப்பட வுள்ளன. பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றி தழ் வழங்கப்படும்.
ஆர்எம்கே குழுமம், உதயம் டால் ஆகிய வற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்க, சசி (9841323106), யுவராஜ் (9962742119) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
ஜான் நினைவு ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் செயலாளர் கிரிபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.