விளையாட்டு

மதுரையில் மாநில செஸ் போட்டி

செய்திப்பிரிவு

வேலம்மாள் 28-வது மாநில அளவிலான 9 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டி (இரு பாலருக்கும்) வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட செஸ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி 9 சுற்றுகளைக் கொண்டதாகும். இந்தப் போட்டியின் பரிசுத் தொகை ரூ.20 ஆயிரம்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இன்று மாலை 7 மணிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிப்பவர்கள் குஜராத்தில் நடைபெறவுள்ள 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட செஸ் சங்க செயலாளர் சேதுராமனை (9843155560) தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT