விளையாட்டு

பாட்மிண்டன் தரவரிசை: ஸ்ரீகாந்த், சிந்து முன்னேற்றம்

செய்திப்பிரிவு

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த உபர் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்ததன் மூலம் சிந்து தரவரிசையில் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்றதோடு நடப்பு உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக்கை வீழ்த்தியதன் மூலம் 8-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் சாய்னா. சீனாவின் லீ ஸியூரூய் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத் தவரையில் இந்தியாவின் காந்த் 5 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரவரிசையாகும். தாமஸ் கோப்பை போட்டியில் தான் விளையாடிய 3 ஆட்டங்களில் இரண்டில் தோற்றபோதும், ஜெர்மனியின் மார்க் ஸ்வைப்லரை வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார் காந்த். இந்தியாவின் மற்றொரு வீரரான காஷ்யப் 21-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். மலேசியாவின் லீ சாங் வெய் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

SCROLL FOR NEXT