பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 152 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசார் அலி 226 ரன்களும், யூனிஸ் கான் 148 ரன்களும், ஆசாத் ஷபிக் 107 ரன்களும் குவித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 27.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. அல்ஹசன் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் அல்ஹசன் ஒருபுறம் சிறப்பாக ஆடியபோதும், மறுமுனையில் சரிவு தவிர்க்க முடியாத தானது.
சவும்ய சர்க்கார் 3 ரன்களிலும், ஷுவகதா ஹோம் ரன் ஏதுமின் றியும், தைஜுல் இஸ்லாம் 15 ரன்க ளிலும், முகமது ஷாஹித் 1 ரன்னி லும் ஆட்டமிழந்தனர். ஷஹாதத் ஹுசைன் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் 47.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப் புக்கு 203 ரன்களோடு முடிவுக்கு வந்தது. அல்ஹசன் 91 பந்துகளில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ், யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜுனைத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணியில் முகமது ஹபீஸ் ரன் ஏதுமின்றியும், சமி அஸ்லாம் 8 ரன்களிலும், அசார் அலி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த யூனிஸ் கான்-கேப்டன் மிஸ்பா ஜோடி 58 ரன்கள் சேர்த்தது. யூனிஸ்கான் 39 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ஆசாத் ஷபிக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய மிஸ்பா உல் ஹக் 72 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் டிக்ளேர் செய்தது. அப்போது அந்த அணி 41.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.
550 ரன்கள் இலக்கு
இதையடுத்து 550 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 11.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. தமிம் இக்பால் 32, மோமினுல் ஹக் 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக இம்ருள் கெய்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 487 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே ஒரு விக்கெட்டை இழந்துவிட்ட நிலையில், ஷஹாதத் ஹுசைன் காயம் காரணமாக விளையாட முடியாததால் அந்த அணியின் வசம் இன்னும் 8 விக்கெட்டுகளே உள்ளன.