விளையாட்டு

கேல் ரத்னா விருது: தீபிகா பெயர் பரிந்துரை

பிடிஐ

இந்திய விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கலின் பெயரை பரிந்துரைத்துள்ளது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி).

23 வயதாகும் தீபிகா பலிக்கல், சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறிய இந்திய வீராங்கனை ஆவார்.

சென்னையில் பிறந்தவரான தீபிகா, 2012-ல் அர்ஜுனா விருதையும், 2014-ல் பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தீபிகா பலிக்கல்-ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

இதுதான் காமன்வெல்த் வரலாற்றில் ஸ்குவாஷ் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம். பின்னர் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் தீபிகா.

இந்த முறை கேல் ரத்னா விருதுக்கு தீபிகா மட்டுமின்றி, சர்தார் சிங் (இந்திய ஹாக்கி கேப்டன்), பி.வி.சிந்து (பாட் மிண்டன்), ஜீவ் மில்கா சிங் (கோல்ஃப்), தேவேந்திர ஜஜா ரியா (பாரா ஒலிம்பிக்), கிரிஷா (பாரா ஒலிம்பிக்), விகாஸ் கவுடா, சீமா பூனியா (இருவரும் வட்டு எறிதல்) ஆகியோ ருடைய பெயர்களும் பரிந்துரைக் கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT