ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை கீதா போகத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆப் ஆட்டத்தில் வியட்நாமின் தி லோன் குயெனை தோற்கடித்தார் கீதா போகத்.
இந்தப் போட்டியின் குரூப் சுற்றில் ஒர் ஆட்டத்தில் மட்டுமே கீதா போகத் தோல்வி கண்டார். ஆடவர் 125 கிலோ டிவிசன் போட்டியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் ஹிதேந்தர் பெனிவால், கஜகஸ்தானின் அய்ல் லஸாரேவிடம் தோல்வி கண்டார்.
மற்ற இந்திய வீரர்களான ராகுல் (57 கிலோ எடைப் பிரிவு), ரஜினீஷ் தலால் (65 கிலோ), சோம்வீர் (86 கிலோ) ஆகியோர் போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே தோல்வி கண்டு வெளியேறினர்.