விளையாட்டு

ஐபிஎல் தொடக்க விழாவில் ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா நடனம்

பிடிஐ

8-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடனமாடுகிறார்கள்.

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் வரும் 7-ம் தேதி ஐபிஎல் தொடக்க விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரசிகர்களை மகிழ்விக்கக் கூடிய வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற வுள்ள தொடக்க விழாவை பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் தொகுத்து வழங்குகிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் ஃபர்ஹான் அக்தர், இசையமைப் பாளர் பிரிதாம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

விழாவின் தொடக்கமாக ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா ஆகியோரின் நடனம் இடம்பெறுகிறது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கோப்பையை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடக்க விழா, இரண்டு மணி நடைபெறும். மாலை 5 மணி முதல் தொடக்க விழா நடைபெறும் மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் ஆகிய தொலைக்காட்சிகளில் தொடக்க விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT