விளையாட்டு

தரவரிசையில் சாய்னா முதலிடம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

பிடிஐ

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை யில் இந்தியாவின் சாய்னா நெவால் முதலிடம் பிடித்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம்.

தரவரிசையில் முதலிடம் பிடிப் பதில் சாய்னாவுக்கும், ஸ்பெயி னின் காரோலினா மரினுக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது. ஆனால் கடந்த வாரம் நடந்த இந்திய ஓபன் போட்டியின் அரையிறுதியில் கரோலினா தோற்றபோதே, சாய்னாவுக்கு முதலிடம் உறுதியானது.

எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றுதான் வெளியானது. சர்வ தேச தரவரிசையில் முதலிடத் தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை சாய்னா ஆவார். ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளையும் கணக்கிட்டால் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த 2-வது இந்தியர் சாய்னா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவின் பிரகாஷ் படுகோன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 9-வது இடத்தில் உள்ளார். ஆடவர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 4-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT