தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) சார்பில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான கோடைகால பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறவுள்ளது.
முதற்கட்ட பயிற்சி முகாம் வரும் 27-ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரையும், 2-வது கட்ட பயிற்சி முகாம் மே 13 முதல் 25-ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், வாலிபால், ஹேண்ட்பால், ஜூடோ, கபடி, ஹாக்கி, கோகோ, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், சேத்துப்பட்டு நேரு பூங்கா, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு பள்ளி மைதானம், வேளச்சேரி நீச்சல் குள வளாகம், புதூர் எஸ்டிஏடி கிரிக்கெட் அகாடமி, ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் ஆகிய இடங்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அது தொடர்பான விவரங்களை மேற்கண்ட மைதானங்களுக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம். >www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும், 044-28364322 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.