விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்: முகமது சமி விலகல்

பிடிஐ

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி முழங்கால் காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி, முழங்காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக லீக் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

8-வது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த சமி ஓர் ஆட்டத்தில்கூட விளையாடாத நிலையில் இப்போது முற்றிலுமாக விலகியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் தொடரிலிருந்து சமி விலகிவிட்டார். அவர் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளது. காயத்தி லிருந்து அவர் முழுமையாகக் குணமடைய குறைந்தபட்சம் 2 மாதங்கள் தேவைப்படலாம்” என்றார்.

ஆரோன் பிஞ்ச் விலகல்?

மும்பை அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஆரோன் ஃபிஞ்சுக்கு கால் பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டுள்ளதால் அவரும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிவிடுவார் என தெரிகிறது.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: தற்போ தைய நிலையில் எனது காயத் தைப் பார்க்கும்போது ஐபிஎல் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது. ஸ்கேன் சோதனையில் தசைநார் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அகமதாபாதில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது ரன் எடுக்க ஓடியபோது ஃபிஞ்சுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்து.

SCROLL FOR NEXT