விளையாட்டு

புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் சச்சின், திராவிட், கங்குலி

பிடிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் சச்சின், திராவிட், கங்குலி இடம்பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுடன் இந்திய பயிற்சியாளர் பதவிக்காலம் டன்கன் பிளெட்சருக்கு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், மற்றும் கங்குலி அடங்கிய மூவர் கூட்டணியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான ஆலோசனைகளை மூவரும் வழங்கவிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரவி சாஸ்திரி அணியின் இயக்குநராக இருந்து வருகிறார். துணைப் பயிற்சியாளர்களான சஞ்சய் பாங்கர், பாரத் அருண், ஆர்.ஸ்ரீதர், ஆகியோர் தக்கவைக்கப்படலாம் என்று தெரிகிறது.

சச்சின், திராவிட், கங்குலி கூட்டணி புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருப்பதால் கங்குலி இந்திய அணியின் பயிற்சியாளர் என்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT