விளையாட்டு

‘செப்டம்பர் வரை ஐசிசி சேர்மனாக சீனிவாசன் நீடிப்பார்’- பிசிசிஐ

பிடிஐ

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. அதுவரை ஐசிசி சேர்மனாக என்.சீனிவாசன் நீடிப்பார் என பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

விதிமுறைப்படி 2014 ஜூலை முதல் 2016 ஜூன் வரை ஐசிசி சேர்மனாக பிசிசிஐயின் பிரதிநிதி இருக்க வேண்டும். அதன்படி இப்போது என். சீனிவாசன் ஐசிசி சேர்மனாக இருந்து வருகிறார். ஆனால் சமீபத்தில் நடந்த பிசிசிஐ தேர்தலில் நீதிமன்ற உத்தரவு காரணமாக சீனிவாசன் பங்கேற்க முடியவில்லை.

அதனால் செயலாளராக எதிரணியைச் சேர்ந்த அனுராக் தாக்கூர் செய்யப் பட்டார். இதனால் பிசிசிஐயில் சீனிவாசன் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் அனுராக் தாக்கூர் மேலும் கூறியிருப்பதாவது: தற்போதைய ஐசிசி சேர்மனான என்.சீனிவாசன், வரும் செப்டம்பர் வரை அந்தப் பதவியில் பிசிசிஐயின் பிரதிநிதியாக இருப்பார்.

செப்டம் பரில் நடைபெறவுள்ள ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின்போது 2016 வரை ஐசிசி சேர்மனாக சீனிவாசனை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப் புள்ளதா என கேட்டபோது, “தற்போ தைய தருணத்தில் யார் பயிற்சி யாளராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து சொல்லும் நிலையில் நான் இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT