ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னிக்குப் பதிலாக கர்நாடகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீநாத் அரவிந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஆடம் மில்னி, 8-வது ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அரவிந்தை சேர்ப்பதற்கு ஐபிஎல் தொழில்நுட்ப கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது.
அரவிந்த் 2-வது முறையாக பெங்களூர் அணிக்காக விளை யாடவுள்ளார். அவர் இதற்கு முன்னர் 2011, 2012 சீசனில் பெங்களூர் அணிக்காக விளை யாடியுள்ளார்.
2011 சீசனில் அரவிந்த் 13 ஆட்டங்களில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டு களை வீழ்த்தியவர் என்ற பெருமை யைப் பெற்றார்.