விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன்: அரையிறுதியில் காஷ்யப்

பிடிஐ

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் காஷ்யப் 21-6, 21-17 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பிரைஸ் லெவர்டேஸை தோற்கடித்தார். இன்று நடைபெறும் அரையிறுதியில் ஹாங்காங்கின் ஹூ யூனை சந்திக்கிறார் காஷ்யப்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் விளையாடவிருந்த இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிலிருந்து விலகினார்.

இதனால் அவரை எதிர்த்து விளையாடவிருந்த ஜப்பானின் கென்டோ மொமோட்டா காலிறுதியில் விளையாடாமலேயே அரையிறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT