விளையாட்டு

எனது வெற்றிக்குப் பின்னால் ஆம்ரே: ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி

பிடிஐ

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எனது வெற்றிக்கு காரணமாக இருப்பவர் எங்கள் அணியின் உதவிப் பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரேதான். நான் சிறப்பாக ஆடி வருவதற்கான அனைத்து பாராட்டுகளும் அவரையே சேரும் என டெல்லி டேர்டெவில்ஸ் தொடக்க வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி யில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையைத் தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ். இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரேயாஸ் மேலும் கூறியதாவது:

நான் சிறப்பாக விளையாடி யதற்கான அனைத்து பாராட்டு களும் உதவிப் பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரேவையே சேரும். ஏனெனில் இந்த ஆட்டத்துக்கு முன்னதாக அவர் என்னுடன் இணைந்து கடுமையாக உழைத் தார். பல்வேறு நுணுக்கங்களை எனக்கு கற்றுத்தந்தார் என்றார்.

டுமினியுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் குவித்தது குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் எதிர்முனையில் இருந்தால் மிகவும் நல்லது. நாங்கள் இருவரும் 15-வது ஓவர் ஓவரை களத்தில் நிற்பது என்று முடிவு செய்தோம். அப்படி களத்தில் நின்றுவிட்டால் நல்ல ஸ்கோரை குவித்துவிட முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

நான் வேகமாக ரன் சேர்க்காத தருணத்திலும் எனக்கு பேட் செய்ய (ஸ்டிரைக்கிங்) வாய்ப்பளித்தார் டுமினி. அவர் அதிரடியாக ஆடியபோது அவர் தொடர்ந்து பேட் செய்யும் வாய்ப்பை நான் ஏற்படுத்தினேன். நாங்கள் இருவரும் இணைந்து பேட் செய்தது இனிமையானதாக இருந்தது” என்றார்.

SCROLL FOR NEXT