விளையாட்டு

ஆசிய பாட்மிண்டன்: சாய்னா, சிந்து தோல்வி

பிடிஐ

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் தோல்வியடைந்தனர்.

சீனாவின் உஹான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சாய்னா 21-16, 13-21, 18-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் சூ இங் தாயிடம் தோல்வி கண்டார்.

இதற்கு முன்னர் இங் தாயை 5 முறை வீழ்த்தியிருந்தபோதும் அப்போதெல்லாம் போராடியே வெற்றி கண்டிருந்தார் சாய்னா. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இங் தாய்க்கு எதிராக சாய்னாவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த சிந்து 21-11, 19-21, 18-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் லீ ஸியூரூயிடம் தோல்வி கண்டார்.

SCROLL FOR NEXT