விளையாட்டு

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் சாதனையை மேத்யூஸ் முறியடிப்பார்: இலங்கை அணி முன்னாள் மேலாளர்

செய்திப்பிரிவு

சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை அஞ்சேலோ மேத்யூஸ் முறியடிப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் மேலாளர் டி ஸோய்சா கூறியுள்ளார்.

46 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள மேத்யூஸ் 3,193 ரன்களை 51.50 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள், 20 அரைசதங்கள் அடங்கும்.

156 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்களை 1 சதம் மற்றும் 26 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

டி ஸோய்சா கூறியதாவது, “வங்கதேசத்துக்கு எதிரான தொடர் முதல் 2015 உலகக் கோப்பை போட்டிகள் வரை, அஞ்சேலோ மேத்யூஸின் வளர்ச்சி பிரமாதமானது. அவர் என்ன இடத்தை நிரப்ப வேண்டுமோ அதனை நிரப்பியுள்ளார். ஜெயவர்தனே, சங்கக்காரா ஆகியோர் அணியில் இல்லாத போது அவர் தானே கேப்டன்சி செய்ய வேண்டும், அப்போது அவரது திறமையை நாம் உண்மையில் பார்க்க முடியும்.” என்றார்

அஞ்சேலோ மேத்யூஸ் தற்போது செல்லும் பாணியில் சென்றால் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சதங்கள் சாதனையை முறியடிக்க முடியும். அவர் தற்போது வைத்திருக்கும் சராசரியை நீடித்து நிலைக்கச் செய்ய முடியும். இலங்கை கிரிக்கெட்டுக்கு இவர் இன்னும் நிறைய பங்களிப்புகளைச் செய்ய முடியும்” என்றார்.

SCROLL FOR NEXT