விளையாட்டு

இணையதளத்தில் தேடப்பட்ட வீரர்களில் கோலிக்கு முதலிடம்

செய்திப்பிரிவு

இணையதளத்தில் அதிக அளவில் ரசிகர்களால் தேடப்பட்ட ஐபிஎல் வீரர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், 3-வது இடத்தை யுவராஜ் சிங்கும் பிடித்துள்ளனர்.

பெங்களூர் வீரர் டிவில்லியர்ஸை மிக அற்புதமாகக் கேட்ச் செய்த கொல்கத்தா வீரர் கிறிஸ்லின் 4-வது இடத்தைத் தட்டிச் சென்றுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் வீரேந்திர சேவாக் பெரிய அளவில் ரன் குவிக்காதபோதிலும் 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இதேபோல் கொல்கத்தா கேப்டன் கௌதம் கம்பீர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதிரடி பேட்ஸ்மேன் கிளன் மேக்ஸ்வெல், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெயில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரெய்னா, சன்ரைஸர்ஸ் கேப்டன் ஷிகர் தவண் ஆகியோரும் அதிக அளவில் ரசிகர்களால் தேடப்பட்ட வீரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

இதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் அதிக அளவில் ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய பயிற்சியாளர் பாங்கர் மட்டும்தான்.-பிடிஐ

SCROLL FOR NEXT