விளையாட்டு

மலேசிய ஓபன் காலிறுதியில் நுழைந்தார் சாய்னா நெவால்

பிடிஐ

அதிகாரபூர்வமாக உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெவால் மலேசிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டனில் காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

சீனாவின் ஸு யாவ் என்பவருக்கு எதிரான ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்திய சாய்னா 21-13, 21-9 என்று நேர் செட்களில் வீழ்த்தினார். இவர்தான் 2014-ம் ஆண்டு மலேசிய ஓபனில் சாய்னாவை வீழ்த்தி வெளியேற்றியவர். இப்போது சாய்னா அவரை எளிதாக நகர்த்தினார்.

30 நிமிடங்களே இந்த ஆட்டம் நீடித்தது. இதனையடுத்து காலிறுதியில் மற்றொரு சீன வீராங்கனை சுன் யூ என்பவரை எதிர்கொள்கிறார் சாய்னா. சுன் யூ உலகத் தரவரிசையில் 15-ம் இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு எதிராக சாய்னாவின் வெற்றி விகிதம் 2-1 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி தழுவி வெளியேறினர்.

அதே போல் இரட்டையர் பிரிவில் ஜுவாலா குட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி இந்தோனேசிய இணையான நித்யா கிருஷிந்தா மகேஸ்வரி-கிரேசியா பொலீ ஆகியோரிடம் போராடி 23-21, 8-21, 17-21 என்ற செட்களில் 2-வது சுற்றில் தோல்வி தழுவினர்.

SCROLL FOR NEXT