விளையாட்டு

பென்ஷன் தொகையை மரணமடைந்த அங்கிட் கேஷ்ரியின் குடும்பத்துக்கு அளிக்கும் கங்குலி

பிடிஐ

கேட்ச் பிடிக்கச் சென்று சகவீரருடன் ஏற்பட்ட மோதலில் மரணமடைந்த பெங்கால் வீரர் அங்கிட் கேஷ்ரி குடும்பத்துக்கு தனது பிச்சிஐ பென்ஷன் தொகையை அளித்து உதவிபுரிய சவுரவ் கங்குலி முடிவெடுத்துள்ளார்.

மேற்கு வங்க லீக் கிரிக்கெட் வீரர் அங்கிட் கேஷ்ரி, கேட்ச் பிடிக்கச் சென்றபோது மற்றொரு வீரருடன் பயங்கரமாக மோதிக் கொண்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மாரடைப்பில் ,மரணமடைந்தார்.

இந்நிலையில் தனது ஓராண்டு பென்ஷன் தொகையை அங்கிட் கேஷ்ரி குடும்பத்துக்கு அளித்து உதவ சவுரவ் கங்குலி முடிவெடுத்துள்ளார்.

“அங்கிட் கேஷ்ரி குடும்பத்துக்கு எனது பென்ஷன் தொகையை கொடுக்க முடிவெடுத்திருக்கிறேன். அதேபோல் கிரிக்கெட் பெங்காலுக்கு விளையாடும் வீரர்கள் காயமடைந்தால் அவர்களின் சிகிச்சைக்கும் பண உதவி செய்ய இந்த பென்ஷன் தொகையை செலவிட முடிவெடுத்துள்ளேன். பிசிசிஐ எனக்கு அளிக்கும் பென்ஷன் தொகையை இதற்கென செலவிட நான் முடிவெடுத்துள்ளேன்” என்றார் கங்குலி.

பிசிசிஐ முன்னாள் டெஸ்ட் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,20,000 பென்ஷன் தொகை அளித்து வருகிறது.

மேலும், அங்கிட் கேஷ்ரியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அளிக்கவுள்ளதாக பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT