விளையாட்டு

புதிய சீருடையில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

செய்திப்பிரிவு

ஐபில்-8-ல் கவுதம் கம்பீர் தலைமையிலான ஷாரூக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் புதிய சீருடையில் களமிறங்கவுள்ளனர்.

கொல்கத்தா அணியின் புதிய ஸ்பான்சர்கள் சீனாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனம் கியோனீ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஜெர்சி யுனைடெட் ஸ்டேட்ஸ் போலோ அசோசியேஷனால் தயாரிக்கப்பட்டது.

கியோனீ தவிர டிஷ் டிவி, ராயல் ஸ்டாக் என்று அதிகாரபூர்வ ஸ்பான்சர்களைக் கொண்டுள்ளது.

கவுதம் கம்பீர் தலைமையில் 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கொல்கத்தா அணி. கடந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தி பட்டம் வென்றது கொல்கத்தா. மணீஷ் பாண்டேயின் அதிரடி 94 ரன்கள் பெரும் பங்களிப்பு செய்தது நினைவிருக்கலாம்.

ஏப்ரல் 8-ம் தேதி ஈடன் கார்டனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஐபிஎல்-8 தொடரைத் தொடங்குகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

கொல்கத்தா அணியில்தான் கர்நாடகாவின் 20 வயது புதிர் ஸ்பின்னர் கே.சி.கரியாப்பா விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT