ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் சீனாவின் லீ நாவை வீழ்த்தி அரையிறுத்திக்கு தகுதி பெற்றார் ரஷ்யாவின் மரியா ஷரபோவா.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் ஷரபோவா நழுவவிட்டார். இதனால் 2-வது சுற்று ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இரண்டாவது செட்டிலும் முதலில் 3-4 என்ற பின்னடைவில் இருந்த ஷரபோவா பின்பு ஆக்ரோஷமாக விளையாடி 7-6 (7/5) என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். 3-வது செட்டில் ஷரபோவா முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். இதனால் அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் வென்று போட்டியில் வெற்றி பெற்றார்.
டென்னிஸ் தரவரிசையில் லீ நா 2-வது இடத்திலும், ஷரபோவா 9-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் போலந்தின் அக்னிஸ்கா ரத்வேன்ஸ்கா அல்லது பிரான்ஸின் கரோலின் கார்சியாவை ஷரபோவா எதிர்கொள்ள இருக்கிறார்.
தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் காலிறுதியில் விளையாடாமல் விலகிவிட்டதால், அவருடன் மோத இருந்த செக். குடியரசின் பெட்ரா விட்டோவா அரையிறுதிக்கு சென்றுவிட்டார்.