விளையாட்டு

10 அணிகள் கொண்ட உலகக் கோப்பை போட்டிகளுக்கு சீனிவாசன் ஆதரவு

பிடிஐ

2019 உலகக் கோப்பை போட்டித் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் முடிவுக்கு ஐசிசி தலைவர் சீனிவாசன் ஆதரவு அளித்துள்ளார்.

இன்று மெல்போர்னில் இறுதிப் போட்டியை நேரில் கண்டு வரும் அவர் கூறியதாவது:

"அடுத்த உலகக்கோப்பையை (2019) எடுத்து கொண்டால் முதன்மை 8 அணிகளைத் தவிர, மீதி 2 அணிகள் தகுதி பெற 6 அசோசியேட் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். ஆகவே அசோசியேட் அணிகள் உலகக்கோப்பையில் பங்கு பெற நல்ல வாய்ப்புகள் உள்ளன. அசோசியேட் அணிகளின் வெற்றிக்கு ஐசிசி-யின் கிரிக்கெட் வளர்ச்சித் திட்டங்களே காரணம்.

ஏற்கெனவே அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் ஐசிசி-யின் 10 அணி பங்குபெறும் உலகக் கோப்பை போட்டித் தொடருக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT