விளையாட்டு

உலகக் கோப்பை: இர்ஃபான் விலகல்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்ஃபான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதியில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ள நிலையில், இர்ஃபானுக்கு காயம் ஏற்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

“இர்ஃபானுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்ததில் அவருடைய இடுப்பெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT