ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வி தழுவியதையடுத்து இந்திய அணியின் பலவீனங்கள் பற்றி கங்குலி பேசியுள்ளார்.
"இந்திய அணியில் சில ஓட்டைகள் உள்ளன. அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். நாம் விஷயங்களை மூடி மறைக்கலாம். ஆனால் உண்மையில் இந்திய அணியில் பலவீனங்கள் உள்ளன. அடுத்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் சில விவகாரங்களை உடனடியாகச் சரி செய்யத் தொடங்குவது அவசியம்.
வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், உமேஷ் யாதவ், ஷமி அளவுக்கு மோஹித் சர்மா திறமையான பவுலர் அல்ல. ஆனால் பலரும் அவரிடம் பெரிய திறமைகள் இருப்பதாக நினைக்கின்றனர்.
இன்னொன்று, ரவீந்திர ஜடேஜா ஒன்று விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் அல்லது ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால் அவர் இரண்டையுமே செய்யவில்லை.
மற்ற அணிகளுக்கும் இந்திய அணிக்கும் உள்ள இடைவெளி இதுதான். ஆஸ்திரேலியாவில் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன் போன்றவர்கள் விக்கெட்டுகளையும் கைப்பற்றுகிறார்கள். தேவைபடும் போது ரன்களையும் எடுக்கிறார்கள். இந்திய அணி அப்படியில்லை" என்றார் சவுரவ் கங்குலி.