சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, சியர் லீடர்ஸ் மீது ரசிகர்கள் பாட்டில்களை விட்டெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.
சென்னை கேப்டன் தோனி வெற்றி ரன்னை எடுத்த உடன் ரசிகர்களில் ஒரு பகுதியினர் அங்கு வெற்றி நடனத்திற்குத் தயாராக இருந்த நடன அழகிகள் (சியர் லீடர்ஸ்) மீது தண்ணீர் பாட்டில்களை விட்டெறிந்தனர். இதனால் அவர்கள் ஓடி ஒளிய நேரிட்டுள்ளது.
முதலில் வந்த நடன அழகிகள் ஓடி ஒளிய, இரண்டாவதாக வந்த நடன அழகிகள் மீதும் தண்ணீர் பாட்டில்களையும் பொருட்களையும் ரசிகர்கள் விட்டெறிந்தனர்.
நடன அழகிகள் பாட்டில்களை விட்டெறிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும் ரசிகர்கள் விட்டெறிவதை நிறுத்தவில்லை.
ராஞ்சி மைதானத்தில் பல போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்று ரசிகர்கள் நடந்து கொள்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
ரசிகர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டனர் என்பதற்கான காரணம் புரியாத புதிராகவே உள்ளது.