ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி 2 இடங்கள் முன்னேறி 8-ம் இடத்தில் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் ஷிகர் தவன் 7-ம் இடத்தில் இருக்கிறார். 843 புள்ளிகளுடன் விராட் கோலி 4ஆம் இடத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்க அதிரடி கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்க, சங்கக்காரா 861 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.
தில்ஷன் 5-ம் இடத்திலும், அவருக்கு அடுத்தடுத்த இடங்களில், கேன் வில்லியம்சன், ஷிகர் தவன், தோனி, மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி ஆகியோர் உள்ளனர்.
முதன்மை 10 பேட்ஸ்மென்களுக்கு வெளியே இந்தியாவின் சுரேஷ் ரெய்னா 17-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தானின் ஷெசாத் 24ஆம் இடத்திலும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 25-ம் இடத்திலும் உள்ளனர். இரண்டு சத வங்கதேச நாயகன் மஹமுதுல்லா 17 இடங்கள் முன்னேறி 44-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சு தரவரிசை விவரம்:
1.சயீத் அஜ்மல்
2. டேல் ஸ்டெய்ன்
3. மிட்செல் ஸ்டார்க்
4. சுனில் நரைன்
5. இம்ரான் தாஹிர்
6. ஜேம்ஸ் ஆண்டர்சன்
7. ஷாகிப் அல் ஹசன்
8. மிட்செல் ஜான்சன்
9. டேனியல் வெட்டோரி
10 மோர்னி மோர்கெல்
பந்துவீச்சு தரவரிசை டாப்-10-ல் இந்திய பவுலர்கள் இல்லை.
புதிய விதிமுறைகளில் ஸ்பின்னர்களின் பங்கு குறைந்துவிட்டது என்று கூறப்பட்டாலும், தரவரிசையில் அஜ்மல், நரைன், இம்ரான் தாஹிர், ஷாகிப் அல் ஹசன், டேனியல் வெட்டோரி என்று ஸ்பின்னர்களின் ஆதிக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.