விளையாட்டு

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து கிளார்க் ஓய்வு

ராய்ட்டர்ஸ்

நாளை மெல்போர்னில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் கடைசி ஒருநாள் போட்டியாகும்.

இறுதிப்போட்டிக்கு முன்னதான வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மைக்கேல் கிளார்க் அறிவித்தார்.

“நாளை (ஞாயிற்றுக் கிழமை) நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் போட்டியே எனது கடைசி ஒருநாள் போட்டி. நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். நாளை நான் விளையாடும் 245-வது ஒருநாள் போட்டி. இவ்வளவு போட்டிகள் நாட்டுக்காக விளையாடுவது என்பது எனக்கு கிடைக்கத்த மிகப்பெரிய கவுரவம். நான் ஒவ்வொரு வீரருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வீரர்களுடன் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு என்னிடம் வந்தது. இன்று இறுதிப் போட்டிக்கு வருவது இந்த 4 ஆண்டுகள் அனுபவம் உதவியது.

கடந்த உலகக்கோப்பையில் நாக்-அவுட் சுற்றில் வெளியேறினோம், இந்த முறை இறுதிக்கு வந்துள்ளோம். நாளை இறுதிப் போட்டியில் வெற்றியை ருசிப்போம் என்று கருதுகிறேன். என்னுடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் 2 உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் ஒரு காலிறுதிக்கு ஆஸி. தகுதி பெற்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவேன். ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது டெஸ்ட் போட்டிகளுக்கான எனது வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. ” என்றார்.

244 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிளார்க் 7,907 ரன்களை 44.42 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 8 சதங்களும் 57 அரைசதங்களும் அடங்கும். =

73 போட்டிகளில் கிளார்க்கின் தலைமைத்துவத்தில் ஆஸ்திரேலியா 49 போட்டிகளில் வென்றுள்ளது.

SCROLL FOR NEXT