“முகமது சமி, உமேஷ்யாதவ் என வட மாநிலத்தின் குக்கிராமங்களில் கிரிக்கெட் விளையாடி வந்தவர் கள், இன்றைக்கு இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதுதான் எங்களுக் கான உத்வேகம்” மிகவும் நம்பிக்கையோடு பேசத்தொடங்கு கின்றனர் திருப்பூரில் புத்தம்புது முயற்சியாக துலிப் ஸ்போர்ட் உள் விளையாட்டரங்கைத் தொடங்கி கிரிக்கெட் பயிற்சியை நடத்தி வரும் மணிகண்டன்-சதிஷ்குமார் சகோதரர்கள்.
திருப்பூர் கல்லூரிச்சாலை எல்.ஐ.சி காலனியில் கடந்த பிப்.24ம் தேதி தொடங்கப்பட்டது இந்த கிரிக்கெட் பயிற்சி உள் விளையாட்டரங்கம். ஆரம்பித்த ஒரு மாத காலத்திற்குள்ளேயே, சின்னஞ்சிறுவர் தொடங்கி மாவட்ட மற்றும் லீக் போட்டிகளில் ஆடும் வீரர்கள் என அனைத்துத் தரப்பின ருக்கும் ஏற்றதொரு பயிற்சிப் பள்ளியாக இது திகழ்கிறது.
இது குறித்து, துலிப் ஸ்போர்ட்டை நடத்தி வரும், சகோதரர்களில் ஒருவரான மணி கண்டன் ‘தி இந்து’ விடம் கூறியது: இந்த உள்விளையாட்டரங்க கிரிக்கெட் பயிற்சியால், மழை காலத்திலும்கூட நம்முடைய பயிற்சி தடைபடாது. மலேசியாவில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட டர்ப் கொண்டு, 3 டிராக் போட்டுள்ளோம். இதில், காலை 6 மணி முதல் இரவு 9 வரை 3 பிரிவுகளாக பயிற்சியளிக்கிறோம்.
பல லட்சம் மதிப்புடைய பிரத்யேக பவுலிங் இயந்திரங்கள் கொண்டு, பேட்டிங் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில், 60 கி.மீ. வேகம் தொடங்கி 160 கி.மீ. வேகம் வரை பவுலிங் இயந்திரம் மூலம் பந்துவீசச் செய்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபடலாம்.
சென்னை, மும்பை உள்ளிட்ட மாநகரங்களில் மட்டுமே இது போன்ற வசதிகள் கொண்ட பயிற்சி அரங்குகளை பார்க்கலாம். ஆனால், திருப்பூர் போன்ற ஒரு நகரத்தில் இது போன்ற உள் விளையாட்டரங்கப் பயிற்சியரங்கம் அமைவது இதுவே முதல்முறை.
சதிஷ்குமார், கிருஷ்ணன், சேகர் மற்றும் ராஜேஷ் ஆகியோர்தான் அன்றாடம் இங்கு வருபவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கிறார்கள். மேலும், கிரிக்கெட் பயிற்சிக்கு வரும் அனைவருக்கும் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான உபகரண வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
கிரிக்கெட் பயிற்சிக்கு வரும் குழந்தைகளின் பெற்றோரும், குழந் தைகளுக்காக வெறுமனே காத் திருக்காமல் உடற்பயிற்சி செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
கிரிக்கெட் பயிற்சிக் கட்டணம் ரூ.1,500 முதல் ரூ.10 ஆயிரம் வரையாகும். பயிற்சியைப் பொறுத்து கட்டணம் வேறுபடும் என்றார்.