விளையாட்டு

இந்திய ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா

பிடிஐ

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை சாய்னா நெவால்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் சாய்னா நெவால் 21-15, 21-12 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ஹனா ரமாதினியை தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தார்.

அதேநேரத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், குருசாய் தத் ஆகியோர் காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர். பிரணாய் 21-16, 9-21, 18-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சென்னிடம் தோல்வி கண்டார். குருசாய் தத் 21 15, 18 21, 13 21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸியூ சோங்கிடம் தோல்வி கண்டார்.

தோல்வி குறித்துப் பேசிய பிரணாய், “நான் ஏராளமான தவறுகளை செய்துவிட்டேன். எனது ஷாட்கள் துல்லியமாக இல்லை. மைதானத்தில் இருந்த போது பொறுமையை இழந்துவிட் டேன். இன்று நான் ஆடிய ஆட்டம் திருப்தியளிக்கவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT