அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் எகடெரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியை, சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது.
இப்போட்டியின் இரண்டாவது செட்டில் 2-4 என்ற கணக்கில் சானியா ஜோடி பின்தங்கியிருந்தது. அதன்பின்னர் எழுச்சி பெற்று ஆதிக்கம் செலுத்தி நேர் செட்களில் போட்டியை வென்றது.
இந்தத் தொடர் முழுவதும் சானியா-ஹிங்கிஸ் ஜோடி ஒரு செட்டைக் கூட இழக்காமல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இது, சானியா இந்த சீசனில் வெல்லும் 2-வது பட்டம் ஆகும்.