ஐபிஎல் 2015 கிரிக்கெட் தொடருக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் ஜே.பி.டுமினி நியமிக்கப்பட்டுள்ளார்.
யுவராஜ் சிங், இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் ஆகியோர் இருந்தும், ஜே.பி.டுமினிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2014-ல் 14 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே டெல்லி அணி வெற்றி பெற்று சொதப்பியது.
இதனையடுத்து புதிய வீரர்களை ஏலம் எடுத்த டெல்லி அணி, யுவராஜ் சிங்கை ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனால் டுமினிதான் கேப்டன் பொறுப்புக்கு ‘சிறந்த தெரிவு’ என்று டெல்லி அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் டுமினி கேப்டன் பொறுப்பில் இருந்துள்ளார்.
டெல்லி அணியின் பயிற்சியாளராக கேரி கர்ஸ்டன் இருப்பதால் அவரது பரிந்துரையின் பேரில் டுமினி நியமிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும், யுவராஜ் சிங் தனது ஆட்டத்தை கேப்டன்சி சுமை இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என்று டெல்லி அணி நிர்வாகம் விரும்புவதாகவும் தெரிகிறது.