விளையாட்டு

விழுப்புரம் பொற்கொல்லரின் கைவண்ணத்தில் உருவான தங்கக் கோப்பை

எஸ்.நீலவண்ணன்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனது கைவண்ணத்தில் 70 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பையை உருவாக்கியுள்ளார்.

மேல்பகுதியில் கிரிக்கெட் பந்து, சுற்றிலும் 3 தாங்கு கம்பிகள், கீழ்பகுதியில் தட்டு என உலக கோப்பை வடிவத்திலேயே அது காணப்படுகிறது.

இது தொடர்பாக ராஜகோபால் கூறும்போது, “உலக கோப்பையை தங்கத்தில் செய்து முடிக்க 2 மணி நேரம் ஆனது. உலக கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனால், அவர்களுக்கு இந்த கோப்பையை பரிசாக வழங்குவேன். இந்த கோப்பையை செய்வதற்கு எனக்கு ரூ.200 மதிப்பிலான தங்கம் மட்டுமே தேவைப்பட்டது” என்றார்.

ராஜகோபால்

SCROLL FOR NEXT