விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட் தமிழகம்-192/3

செய்திப்பிரிவு

தமிழக-மஹாராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தமிழகம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கேப்டன் அபிநவ் முகுந்தும் முரளி விஜயும் தமிழகத்தின் இன்னிங்ஸை தொடங்கினர்.

ஆமை வேகத்தில் ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25.5 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தது. 79 பந்துகளைச் சந்தித்த முகுந்த் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, விஜயுடன் இணைந்தார் அபராஜித்.

இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. விஜய் 109 பந்துகளில் 28 ரன்களும், அபராஜித் 81 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 87 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 48 ரன்களும், சங்கர் 56 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT