விளையாட்டு

காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்

செய்திப்பிரிவு

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

19 வயது இளம் வீராங்கனையான சிந்து, மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் ஷிசுகா யுசாய்தாவை எதிர்கொண்டார். இதில் 21-17, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். காலிறுதியில் உலகின் 3-வது நிலை வீராங்கனையான சீனாவின் யியாங் வாங்கை சிந்து இன்று எதிர்கொள்கிறார். இது அவருக்கும் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஹாங்காங்கின் யூன் ஹுவை எதிர்கொள்கிறார். யூன் ஹுவை ஸ்ரீகாந்த் ஏற்கெனவே ஒருமுறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகளால் இரண்டாவது சுற்றைக் கூட தாண்ட முடியவில்லை.

SCROLL FOR NEXT