விளையாட்டு

ஐடிஎப் டென்னிஸ்: அரையிறுதியில் பிரார்த்தனா, நடாஷா

செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெற்று வரும் மகளிர் ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் முதல் இரு இடங்களில் இருக்கும் இந்திய வீராங்கனைகள் பிரார்த்தனா தோம்பரே, நடாஷா பல்ஹா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரார்த்தனா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் வருண்யா வாங்டியான்சாயை தோற்கடித்தார். மற்றொரு காலிறுதியில் நடாஷா 6-0, 6-2 என்ற நேர் செட்களில் ஜப்பானின் ஹிரோனோவை வீழ்த்தினார்.

இதேபோல் இந்தியாவின் நிதி சிலுமுல்லா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜி யாவ் வாங்கிற்கு அதிர்ச்சி தோல்வியளித்து அரையிறுதியை உறுதி செய்தார். சிலுமுல்லா ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுவது மூன்றாவது முறையாகும்.

மற்றொரு இந்திய வீராங்கனையான இட்டி மஹேதா 6-7 (3), 6-1, 6-0 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ரிஷியா சுரங்காவைத் தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தார். இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகளான நடாஷா-பிரார்த்தனா ஜோடி, சகநாட்டு ஜோடியான சர்மதா பாலு-ரிஷிகா ஜோடியை சந்திக்கிறது.

SCROLL FOR NEXT