2014-ம் ஆண்டின் சிறந்த பேட்ஸ் மேனுக்கான (ஒருநாள் போட்டி) இஎஸ்பிஎன் கிரிக்இன்போ விருது இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்ததன் மூலம் அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். 2013-ல் இரட்டை சதமடித்தபோதும் அவர் இதே விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பவுலருக்கான (ஒருநாள் போட்டி) விருதை இலங்கையின் லசித் மலிங்காவுக்கு வழங்கி யுள்ளது கிரிக்இன்போ. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மலிங்கா 56 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த டெஸ்ட் பவுலருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சனும், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான விரு துக்கு நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் விருதுக்கு இங்கி லாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸும், சிறந்த பவுலர் விருதுக்கு ரங்கனா ஹெராத்தும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.