விளையாட்டு

ஆஸ்திரேலிய ஆதிக்கத்தைத் தடுக்கும் முனைப்புடன் ஏ.பி.டீவிலியர்ஸ்

செய்திப்பிரிவு

4-வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல முடிவுகட்டி விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்த உலகக்கோப்பையில் முறியடிக்க தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏ.பி.டீவிலியர்ஸ் முனைப்பு காட்டி வருகிறார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆஸி. அணி ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 1 என்பதை மறுக்க முடியாது. உள்நாட்டில் விளையாடுகின்றனர், இதனால் அனுகூலங்கள் அதிகம். இதனால் கொஞ்சம் அழுத்தம் கூட அவர்களுக்கு இருக்கும்.

ஆனால், இந்த முறை உலகக்கோப்பை வெல்லும் அணியில் எங்கள் அணியும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. உலகில் தலைசிறந்த அணி தென் ஆப்பிரிக்கா என்ற பெயரை மகிழ்ச்சியுடன் அணுகுகிறோம். ஜிம்பாவேயில் ஆஸ்திரேலியாவை சமீபத்தில்தான் வெற்றி பெற்றுள்ளோம்.

எனவே, உலகின் சிறந்த அணி என்ற முதலிடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த உலகக்கோப்பையில் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு, தவற விட மாட்டோம் என்று நம்புகிறோம்.

ஆஸ்திரேலியா தவிர நியூசிலாந்து ஒரு அபாயகரமான அணி, பிரெண்டன் மெக்கல்லம் ஒரு அருமையான கேப்டன், அணியை பிரமாதமாக வழிநடத்திச் செல்கிறார்.” என்றார்.

SCROLL FOR NEXT