விளையாட்டு

சர்க்கிள் கோப்பை: செரீனா அதிர்ச்சி தோல்வி

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் சார்லஸ்டான் நகரில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ டூர் பேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டார் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.

அவர் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் உலகின் 78ம் நிலை வீராங்கனையான ஸ்லோவேகியாவின் ஜனா செபலோவாவிடம் தோல்வி கண்டார். 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான செரீனா வில்லியம்ஸ், தனது தோல்வி குறித்துப் பேசுகையில், “மனரீதியாக மிகவும் களைப்படைந்துவிட்டேன். எனக்கு கொஞ்ச நாள்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அப்படி ஓய்வெடுத்தால்தான் சிறப்பாக ஆடுவதற்கு தயாராக முடியும்” என்றார். சார்லஸ்டான் போட்டியில் 2008, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்ற செரீனா, இந்த முறை 2-வது சுற்றோடு வெளியேறியுள்ளார்.

SCROLL FOR NEXT